அபிஷேக் சர்மா : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதன்படி தற்போது, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட முதல் 3டி2- போட்டியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் போட்டியில் அபிஷேக் சர்மா டக்-அவுட் ஆன நிலையில், இரண்டாவது போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் விளாசி அசத்தினார்.
வெறும் 46 பந்துக்கு 100 ரன்கள் எடுத்து அசத்தினார், அதில் 8 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இவருடைய அதிரடியான ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்தியாவின் எதிர்காலம் என புகழ்ந்து வருகிறார்கள். இந்த சூழலில், அவருடைய தந்தை ராஜ்குமார் எப்போதும் பேட்டிங் ஸ்டைலை அபிஷேக் சர்மா மாற்றவே கூடாது என அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய ராஜ்குமார் ” முதல் போட்டியில் அவர் சரியாக இல்லை. ஆனால், இரண்டாவது போட்டியில் தவறை எல்லாம் உணர்ந்து கொண்டு தைரியமாக விளையாடி சதம் விளாசினார். ஒரு தந்தையாக நான் அதனை ரசித்த போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் போட்டியில் அவர் சரியாக விளையாடாததை நினைத்து வேதனையில் இருந்தார்.
சிக்ஸர் அடிக்க சென்று அவுட் ஆகிவிட்டோம் கொஞ்சம் பொறுமையாக விளையாடவேண்டும் என்று அவருக்கு எண்ணம் வந்து இருப்பதாக நான் நினைக்கிறன். நான் அவருக்கு சொல்லும் ஒரு விஷயம் என்னவென்றால் அவருடைய ஸ்டைல் சிக்ஸர்கள் விளாசுவது தான். எனவே, அதனை மாற்றிக்கொள்ளாமல் தைரியமாக விளையாடினாள் போதும். அவருடைய சிக்ஸர் அடிக்கும் திறமைதான் இங்கு வருவதற்கு உதவியிருக்கிறது என்பதை நினைவுபடுத்தினேன்.
எனவே, அந்த திறமையை எப்போதும் விட்டுவிடாமல் விளையாடவேண்டும். என்ன நடந்தாலும் அதை மட்டும் மாற்றக்கூடாது என்பது தான் என்னுடைய ஆசை. வரும் போட்டிகளும் அவர் இன்னும் சிறப்பாக விளையாடுவார் என்று நான் நினைக்கிறன்” எனவும் அபிஷேக் சர்மாவின் தந்தை ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…