என்ன நடந்தாலும் அதை மட்டும் மாற்றக்கூடாது…அபிஷேக் சர்மாவுக்கு அப்பா கூறிய அட்வைஸ்!!

அபிஷேக் சர்மா : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதன்படி தற்போது, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட முதல் 3டி2- போட்டியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் போட்டியில் அபிஷேக் சர்மா டக்-அவுட் ஆன நிலையில், இரண்டாவது போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் விளாசி அசத்தினார்.
வெறும் 46 பந்துக்கு 100 ரன்கள் எடுத்து அசத்தினார், அதில் 8 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இவருடைய அதிரடியான ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்தியாவின் எதிர்காலம் என புகழ்ந்து வருகிறார்கள். இந்த சூழலில், அவருடைய தந்தை ராஜ்குமார் எப்போதும் பேட்டிங் ஸ்டைலை அபிஷேக் சர்மா மாற்றவே கூடாது என அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
சிக்ஸர் அடிக்க சென்று அவுட் ஆகிவிட்டோம் கொஞ்சம் பொறுமையாக விளையாடவேண்டும் என்று அவருக்கு எண்ணம் வந்து இருப்பதாக நான் நினைக்கிறன். நான் அவருக்கு சொல்லும் ஒரு விஷயம் என்னவென்றால் அவருடைய ஸ்டைல் சிக்ஸர்கள் விளாசுவது தான். எனவே, அதனை மாற்றிக்கொள்ளாமல் தைரியமாக விளையாடினாள் போதும். அவருடைய சிக்ஸர் அடிக்கும் திறமைதான் இங்கு வருவதற்கு உதவியிருக்கிறது என்பதை நினைவுபடுத்தினேன்.
எனவே, அந்த திறமையை எப்போதும் விட்டுவிடாமல் விளையாடவேண்டும். என்ன நடந்தாலும் அதை மட்டும் மாற்றக்கூடாது என்பது தான் என்னுடைய ஆசை. வரும் போட்டிகளும் அவர் இன்னும் சிறப்பாக விளையாடுவார் என்று நான் நினைக்கிறன்” எனவும் அபிஷேக் சர்மாவின் தந்தை ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025