2024ம் ஆண்டுக்கான சிறந்த ODI அணியில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை..!

ஐசிசி வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் போட்டிக்கான அணியில் இந்தியா சார்பில் ஒருவர் கூட இடம் பெறவில்லை.

ICC Men's ODI Team of the Year for 2024

டெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்களை கொண்ட அணியில், இந்திய வீரர்கள் யாருமே இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024ல் மொத்தமாக 3 ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடியது. அதில் 2போட்டிஇல்லை இந்தியா தோல்வியை தழுவியது.

இந்நிலையில், அதிக போட்டிகள் விளையாடிய இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மே.இ.தீவுகள் வீரர்கள் மட்டுமே ஐசிசி வெளியிட்டுள்ள அணியில் இடம்பிடித்துள்ளனர். அதன்படி, இலங்கையைச் சேர்ந்த நான்கு வீரர்களும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தலா மூன்று கிரிக்கெட் வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டின் ஐசிசி ஒருநாள் அணி பட்டியலில், சைம் அயூப் (பாகிஸ்தான்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்), பாத்தும் நிஸ்ஸங்கா (இலங்கை), குசல் மெண்டிஸ் (இலங்கை), சரித் அசலங்கா (இலங்கை), ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் (மேற்கிந்திய தீவுகள்), அஸ்மத்துல்லா உமர்சாய் (ஆப்கானிஸ்தான்), வனிந்து ஹசரங்க (ஸ்ரீ இலங்கை), ஷாஹீன் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்), ஹாரிஸ் ரவுஃப் (பாகிஸ்தான்), அல்லா கசன்ஃபர் (ஆப்கானிஸ்தான்) இடம்பெற்றுள்ளனர்.

ஆனால் இந்த பட்டியலில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை. 2024 ஆம் ஆண்டின் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆனாலும், யாரும் அணியில் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்