மெல்போர்ன் மைதானத்தில் பேய்கள் எதுவும் இல்லை ! கடுப்பான ரிக்கி பாண்டிங்..!
இந்தியா vs ஆஸ்திரேலியா வுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை விட 131 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து, இறங்கிய ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 200 ரன்கள் எடுத்தனர். பின்னர், களம்கண்ட இந்திய அணி 15.5 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 70 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றனர்.
இந்த டெஸ்ட் மிகவும் பிரபலமான பாக்ஸிங் டே டெஸ்ட் என்பதால் அனைவரும் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியா அணி கடந்த டெஸ்டை விட இதில் மோசமான ஆட்டத்தையை வெளிப்படுத்திய.
இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ,இங்கு எம்.சி.ஜி ஆடுகளத்தில் பேய்கள் எதுவும் இல்லை, நீங்கள் ஆடுகளத்தை குறைகூற முடியாது. அதேவேளையில் ஆடுகளம் மிகச்சரியாக உள்ளது, இது சற்று சுழலும் தன்மை கொண்டது என்றார்.
ஆஸ்திரேலிய வீரர்களால் தங்களது வழக்கமான பொறுப்பு ஆட்டத்தை ஆடமுடியாமல் போனதை இது காட்டுகிறது. இதனால் அழுத்தம் உருவாகிறது. அழுத்தம் அதிகரிக்கும் போது மோசமான பேட்டிங் வெளிப்படும், இது மிக மிக மோசமான பேட்டிங் என்று கூறினார்.