கம்பீர் இல்லை …லக்ஷ்மன் தான் ‘ஹெட் கோச்’? தென்னாபிரிக்கா தொடரில் அதிரடி மாற்றம்!
இந்தியா - தென்னாபிரிக்கா டி20 தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் இடம்பெற உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை : இந்திய அணி, தென்னாப்பிரிக்காவில் வரும் நவம்பர்-7 முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அந்த சுற்றுப் பயணத்தில் 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரை விளையாடவுள்ளது இந்திய அணி. இந்த தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியலைக் கடந்த அக்.-26ம் தேதி பிசிசிஐ வெளியிட்டது.
சூரியகுமார் தலைமையிலான இந்த அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் என 15 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பீர் இந்த டி20 தொடரில் இந்திய அணியுடன் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்கா செல்ல மாட்டார் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், அவருக்குப் பதிலாக இந்திய முன்னாள் வீரரான விவிஎஸ் லக்ஷமன் தலைமை பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியுடன் தென்னாப்பிரிக்கா செல்வார் எனத் தெரியவந்துள்ளது. முன்னதாக ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த போது இதே போல விவிஎஸ் லக்ஷமன் இந்திய அணியை வழி நடத்தி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் சென்றார்.
அந்தத் தொடரிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. தற்போது, அதே போன்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதனால், வரும் நவ-7 ம் தேதி இந்திய அணியுடன் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷன் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவலும் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி :
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ராமன்தீப் சிங், வருண் சகரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், அவேஷ் கான் , யாஷ் தயாள்.