சஹாலும் இல்லை..சக்ரவர்த்தியும் இல்லை..ரொம்ப மோசம்! முன்னாள் கிரிக்கெட் வீரர் வேதனை!
IND v ZIM : இந்திய கிரிக்கெட் அணி இப்போது டி20 உலகக்கோப்பை 2024-இல் விளையாடி வரும் நிலையில், அடுத்ததாக ஜூலை மாதம் ஜிம்பாப்வேக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்படவில்லை. வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய இரு முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அணியில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் வருண் சக்கரவர்த்தி இடம்பெறாதது பற்றி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா ” உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைக்காத நம்மளுடைய இந்திய தோழர்கள் வாய்ப்பு கிடைக்காமல் வெளியே இருக்கிறார்கள்.
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் சாஹல் மற்றும் வருண் சக்கரவர்த்தி போன்ற நல்ல சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இல்லாதது ஏமாற்றத்தை எனக்கு கொடுத்தது. உலகக்கோப்பை அணியில் இருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் மற்றும் கலீல் அகமது ஆகியோர் ஜிம்பாப்வேக்கு எதிரான இந்த தொடரில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியிலும் உள்ளனர்.
சாஹல் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் நல்ல வீரர்கள். அவர்களை அணியில் எடுத்தால் நமக்கு தான் பலன் பிறகு எதற்காக அவர்களை தேர்வு செய்யவில்லை என்பது எனக்கு புரியவில்லை. வருண் சக்கரவர்த்தி மிக நன்றாக ஐபிஎல் விளையாடினார். வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக கூட நீங்கள் அவரை எடுத்து சென்று இருக்கலாம். ரவி பிஷ்னோய் இந்த அணியின் ஒரு பகுதியாக இருக்கிறார். அவருக்கு பதிலாக கூட சாஹலை எடுத்து செல்லலாம். ஆனால், சாஹல், வருண் சக்கரவர்த்தியை எடுக்காதது வேதனையாக இருக்கிறது.
அதற்குப் பிறகு, அணியில், 4 வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். என்னைப் பொறுத்தவரையில், ஹர்ஷித் ராணா இருந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ஆனால் அவர் இந்த அணியில் இல்லை. அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார் மற்றும் துஷார் தேஷ்பாண்டே உள்ளனர். நான் நினைத்த வீரர்கள் இல்லாதது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது” எனவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளது.
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகீல் அகமது , துஷார் தேஷ்பாண்டே.