பும்ராவும் இல்லை…ஹர்திக்குக்கும் இல்லை! மும்பை இந்தியன்ஸ்க்கு விழுந்த பெரிய அடி!

ஐபிஎல் 2025 தொடரில் பும்ரா முதல் 5 போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகள் குறைவு என தகவல்கள் வெளியாகியுள்ளது.

jasprit bumrah ipl HARDIK

சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய கவனம் ஐபிஎல் போட்டிகள் பக்கம் திரும்பியுள்ளது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. எனவே, ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகள் போட்டிக்கு தயாராகி வருகிறது. 23-ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய பரம எதிரியான சென்னை அணியை சென்னையில் வைத்து எதிர்கொள்ளவிருக்கிறார்கள்.

அந்த போட்டி பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இருந்து வரும் சூழலில், மும்பை ரசிகர்களுடைய கேள்வியாக இருக்கும் என்னவென்றால், காயத்தில் இருக்கும் பும்ரா ஐபிஎல் போட்டிக்கு திரும்புவாரா?என்பது தான்.சிட்னியில் நடந்த 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது அவருக்கு காயம் ஏற்பட்டது. எனவே, காயத்தில் இருந்து மீண்டு வரவேண்டும் என்றால் ஓய்வு வேண்டும் என்பதால் ஓய்வு பெற்றுக்கொண்டிருந்தார்.

இதன் காரணமாக அவர் நடந்து முடிந்த முக்கிய தொடரான சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. இப்போது பும்ரா மெல்ல மெல்ல குணமாகி வருகிறார். காயம் சரியாகிவிட்ட போதிலும் அவரால் முழுவதுமாக ஐபிஎல் போட்டிகள் விளையாடமுடியுமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் 5 போட்டிகளை பும்ரா தவறவிட வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தகவலை தெரிவித்துள்ளனர்.

காயம் சரியாகி உடற்தகுதி சரியாக அவ்வளவு நாட்கள் ஆகும் என்பதால் பும்ராவால் இந்த வருடம் ஐபிஎல் தொடரின் முதல் 5 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு குறைவு என வெளியாகி இருக்கும் இந்த தகவல் மும்பை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மும்பை ரசிகர்கள் இந்த அளவுக்கு அதிர்ச்சியாக முக்கிய காரணமே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார்.

ஏனென்றால், மெதுவான ஓவர் விகிதத்தை மீறியதால், இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மார்ச் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் மும்பை அணிக்கு கேப்டன் ஹார்திக் விளையாடமாட்டார். எனவே, இருவரும் இல்லாமல் அணி விளையாடப்போகிறது என்பதால் பின்னடைவான விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்