கேமரா லென்ஸை உடைத்த நிதிஷ் ராணா…!
நேற்றைய போட்டியில் கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணா மைதானத்தில் இருந்த கேமரா லென்ஸை உடைத்தார்.
நேற்றைய தினத்தின் 2-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் இறங்கிய ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 115 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து களம் கண்ட கொல்கத்தா அணி 19.4 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 119 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இப்போட்டியில் கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணா மைதானத்தில் இருந்த கேமரா லென்ஸை உடைத்தார்.
நேற்றைய போட்டியில் 18-வது ஓவரை ஹைதராபாத் அணி வீரர் ஹோல்டர் வீசினார். அந்த ஓவரின் 4 -வது பந்தை ஹோல்டர் வீசியபோது அதை கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணா தூக்கி அடித்து பவுண்டரி சென்றது. அப்போது பவுண்டரி லைனில் இருந்த கேமராவில் பந்து அடித்து கேமரா லென்ஸ் உடைந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Nitish Rana breaks Camera lens????#KKRvSRH #IPL2021 #NitishRana pic.twitter.com/7ItIPsK6rb
— Subuhi S (@sportsgeek090) October 3, 2021