சரித்திரத்தில் பெயர் பதித்த நிதிஷ்குமார் ரெட்டி! மெல்போர்ன் மைதானம் அளித்த கௌரவம்!
மெல்போர்ன் மைதானத்தில் உள்ள சிறந்த வீரர்களை கௌரவிக்கும் பலகையில் இந்திய கிரிக்கெட் வீரர் நிதிஷ்குமார் ரெட்டி பெயர் இடம்பெற்றுள்ளது.
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகின்றனர். இதில் 3 டெஸ்ட் நிறைவுற்ற நிலையில், 4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 2வது மற்றும் 3வது போட்டியில் சற்று தடுமாறியது. 2வது போட்டியில் தோல்வியும், 3வது டெஸ்ட் போட்டியில் போராடி ஆட்டத்தை சமன் செய்தது. 4வது போட்டியில் முதல் இன்னிங்சிலும் நட்சத்திர ஆட்டக்காரர்கள் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை. ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி கடந்த முதல் இன்னிங்சில் 7வது விக்கெட்டில் களமிறங்கி 114 ரன்கள் எடுத்திருந்தார்.
அதே போல முந்தைய டெஸ்ட் போட்டிகளிலும் நிதிஷ்குமார் ரெட்டி, இறுதிக்கட்டத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடியுள்ளார். மேலும் ஒரு சில விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதனை பாராட்டும் விதமாக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் சிறப்பாக விளையாடிய வீரர்களின் பெயர் பதிக்கும் கௌரவ பலகையில் நிதிஷ்குமார் ரெட்டி பெயர் இடம்பெற்றுள்ளது.