நீ ஜெயிச்சிட்ட மாறா! சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி…கண்கலங்கிய தந்தை!
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்ச்சியில் இருந்து மீட்டது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை நிதிஷ் குமார் ரெட்டி பூர்த்தி செய்துள்ளார்.
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் “இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம் ஏறி ஆடு.. கபிலா” என்கிற வசனத்திற்கு ஏற்பது போல, இந்திய கிரிக்கெட் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி தன் மீது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளார்.
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3), விராட் கோலி (36), ரிஷப் பந்த் (28) என ஆட்டமிழந்த நிலையில், இனிமேல் யார் இறங்கி விளையாடி ரன்களை உயர்த்த போகிறார் என ரசிகர்கள் சோகத்தில் இருந்தார்கள். அந்த சமயத்தில் தான் நான் இருக்கிறேன் என நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கினார்.
அவர் களமிறங்கியவுடன் ஆஸ்ரேலியா வீரர்களும் யார்ரா இந்த பையன் என்கிற வகையில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதன்பிறகு அவருடைய பந்தை நிதானமாக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி 176 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 105 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.போட்டியில் அவர் 170 பந்துகளில் சதம் விளாசினார்.
அவர் சதம் விளாசிய பிறகு இந்திய அணி வீரர்கள் எழுந்து நின்று அவருக்கு கைகளை தட்டி பாராட்டுகளை தெரிவித்தனர். சதம் விளாசிய மகிழ்ச்சியில் கீழே முட்டிபோட்டுக்கொண்டு வானத்தை நோக்கி பார்த்து கடவுளுக்கு நன்றியை தெரிவித்தார். அத்துடன், தன்னுடைய மகன் சதம் விளாசியதை பார்த்த நிதிஷ் குமார் ரெட்டி தந்தை மைதானத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
கண்ணீருடன் அவர் தன்னுடைய மகனை பார்த்தது நீ ஜெயிச்சிட்ட மாறா என்கிற வசனத்திற்கு ஏற்பது போல இருந்தது. இந்த எமோஷனலான தருணங்கள் தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தந்தை மட்டுமின்றி நிதிஷ் குமார் ரெட்டி சதம் விளாசியதை அவருடைய குடும்பமும் கொண்டாடியது.