திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி! 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி முட்டி போட்டு படியேறி சாமி தரிசனம் செய்தார்.

Nitish kumar reddy

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதில் மூத்த நட்சத்திர வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால், இதில் அறிமுக ஆட்டக்காரராக களமிறங்கிய நிதிஷ்குமார் ரெட்டி இந்த தொடரில் சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாக செயல்பட்டார்.

ஆஸ்திரேலியா மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடி சதம் விளாசினார். அதனால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதான பாராட்டு பட்டியலில் இடம் பிடித்தார்.  அந்த தொடரில் இந்தியா தோல்வி அடைந்து இருந்தாலும், 298 ரன்கள் எடுத்து இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இப்படியாக நல்ல வீரர் என்ற பெயரை எடுத்த நிதிஷ் ரெட்டி, தனது சொந்த ஊரான ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் வந்திருந்த போது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை அடுத்து அண்மையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முட்டி போட்டபடி படியேறி சாமி தரிசனம் செய்து தனது நேர்த்திக்கடனை செலுத்தினார். இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்