நிதிஷ் குமார், ரிங்கு சிங்குக்கு என்னாச்சு?… பிசிசிஐ கொடுத்த விளக்கம்.!
கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியின் போது ஏற்பட்ட வலி காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான 2வது மற்றும் 3வது டி20 போட்டிகளில் இருந்து இந்திய வீரர் ரிங்கு சிங் நீக்கப்பட்டுள்ளார்.
சென்னை : இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி இன்று இரவு 7 மணி அளவில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதில், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்திற்கு எதிரான 2வது மற்றும் 3வது டி20 போட்டியில் இந்திய வீரர் ரிங்கு சிங் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியின் போது ஃபீல்டிங் செய்யும்போது ஏற்பட்ட வலி காரணமாக, 2வது போட்டியில் ரிங்கு சிங்குக்கு மாற்றாக ரமன்தீப் சிங் விளையாடுவார். மேலும், ஜனவரி 24-ம் தேதி சென்னையில் நடந்த பயிற்சியின்போது, நிதிஷ் குமாருக்கு காயம் ஏற்பட்டது. அவர் காயமடைந்து தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில், நிதிஷ் குமார் தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு மாற்றாக ஷிவம் தூபே விளையாடவுள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இப்பொது, ரிங்கு சிங் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார், பிசிசிஐ மருத்துவக் குழு அவரை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்று விளக்கம் அளித்துள்ளது.
தற்போது, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் அக்சர் படேல், சஞ்சு சாம்சன் (டபிள்யூ கே), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண். சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல், சிவம் துபே, ரமன்தீப் சிங் ஆகியோர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.