ப்ராட்மேனுக்கு அடுத்தபடியாக டெஸ்ட்டில், லாபுஸ்சேன் படைத்த சாதனை.!
மார்னஸ் லாபுஸ்சேன், ப்ராட்மேனுக்கு அடுத்தபடியாக டெஸ்ட்டில் அதிவேகமாக 3000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் மார்னஸ் லாபுஸ்சேன், டெஸ்ட் போட்டிகளில் குறைந்த இன்னிங்சில் அதிவேகமாக 3000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். லாபுஸ்சேன், ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் 163 ரன்கள் அடித்த போது இந்த சாதனை நிகழ்த்தியுள்ளார்.
28 வயதான லாபுஸ்சேன் 51 இன்னிங்சில் விளையாடி, இந்த 3000 ரன்கள் மைல்கல்லை எட்டியுள்ளார். லாபுஸ்சேன், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டர் எவர்டன் வீக்ஸ் உடன் இந்த சாதனையை பகிர்ந்துள்ளார். எவர்டன் வீக்ஸ்-உம், 51 இன்னிங்சில் 3000 ரன்களை கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட்டர் டான் ப்ராட்மேன் முதலிடத்தில் உள்ளார். ப்ராட்மேன், வெறும் 33 இன்னிங்சில் அதிவேகமாக 3000 ரன்களைக் கடந்து சாதனை பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
Wow.
Only one player has achieved the milestone faster than Marnus Labuschagne … the Don #AUSvWI pic.twitter.com/rdEZMuC43u
— cricket.com.au (@cricketcomau) December 9, 2022