இப்போ அமெரிக்கா ..அடுத்து இலங்கை..! சுற்று பயணம் மேற்கொள்ள போகும் இந்திய அணி!

INDvSL : இந்த ஆண்டிற்கான 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. மேலும், இந்த தொடரில் தற்போது நாளை மறுநாள் அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளனர்.
இந்நிலையில், இந்திய அணி அடுத்த மாதம் ஜூலை-27 ம் தேதி முதல் இலங்கையில் 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் என சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது. அதற்கான அட்டவணை வெளியாகி இருக்கிறது.
ஆனால், அதிகாரப்பூர்வ அணியை இந்தியா அணி தற்போது வரை வெளியிடவில்லை ஆனால், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ரியான் பராக் மற்றும் அபிஷேக் சர்மா இந்த அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு மிக முக்கிய காரணமாக கம்பிராக இருப்பர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த உலகக்கோப்பை தொடர் முடிவதோடு இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவி காலம் முடிந்து விடும்.
அவருக்கு அடுத்த படியாக கவுதம் கம்பிர் தான் தலைமை பயிற்சியாளராக செயலாற்றுவார் என கிட்ட தட்ட உறுதியாகிவிட்டது. பிசிசிஐயின் அதிகாரபூர்வ தகவலுக்காக மட்டுமே அனைவரும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இந்திய அணி டி20 உலகக்கோப்பைக்கு பிறகு விளையாட போகும் முதல் சுற்று பயணம் இலங்கை தான் எனவும் அதுவும் கம்பிரின் தலைமை பயிற்சியில் இந்திய அணி செல்லும் முதல் சுற்று பயணம் இது தான் எனவும் ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியாvsஇலங்கை சுற்று பயணத்தின் முழு அட்டவணை:
- முதலாவது டி20I – 27 ஜூலை – இரவு 7.00 PM
- 2வது டி20I – 28 ஜூலை – இரவு 7.00 PM
- 3வது டி20I – 30 ஜூலை – இரவு 7.00 PM
- முதல் ஒருநாள் – ஆகஸ்ட் 2 – பிற்பகல் 2.30 PM
- 2வது ஒருநாள் – ஆகஸ்ட் 4 – பிற்பகல் 2.30 PM
- 3வது ஒருநாள் – ஆகஸ்ட் 7 – பிற்பகல் 2.30 PM