உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவானது வரும் 30 தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது.இதில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறது.மேலும் உலககோப்பை போட்டியானது இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது.
தற்போது எல்லா அணிகளும் முதலில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் அப்படி பயிற்சி ஆட்டமும் துவங்கி உள்ளது.சவுதம்டனில் இந்தியாவிற்கான முதல் பயிற்சி போட்டியில் நியுசிலாந்தை எதிர்கொண்டது.
இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பாலால் நியூசிலாந்திடம் தோற்றது.
நியூசிலாந்தின் பந்து வீச்சில் ரோகித் சர்மா 2 ரன்னிலும் , ஷிகர் தவான் 2 ரன்னிலும் ,அதன் பின் களமிறங்கிய கேப்டன் கோலி 18 ரன்னிலும் , அவுட்டாகினர்.
ஹர்திக் பாண்டியா 30 ரன்னிலும் ,டோனி 17 , திணேஷ் கார்த்திக் 4 ரன்னிலும் எடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.115 ரன்கள் எடுப்பதற்குள் இந்திய அணி 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
அதன் பின் ஜடேஜா மற்றும் குல்தீப் இருவரும் அணியின் ரன்களை சற்றே உயர்த்தினர்.ஜடேஜா அரை சத்துடன் 54 ரன்னில் வெளியேறினார்.குல்தீப் 19 ரன்னிலும் ஆட்டமிழந்து இந்தியா 179 ரன்னில் சுருண்டது.
இந்த பின் களமிறங்கிய நியூசிலாந்து 37.2 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.அந்த அணியின் ராஸ் டெய்லர் 79 ரன்னும் , கேப்டன் கேன் வில்லியம்சன் 69 ரன்னும் எடுத்து அசத்தினர்.
நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் நிசம் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.நேற்றைய ஆட்டத்தில் இந்திய தரப்பில் விக்கெட் கிப்பராக திணேஷ் கார்த்திக் செயல்பட்டார்.மேலும் இந்தியா நாளை பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசத்தை நாளை எதிர்கொள்கிறது
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…