U19WorldCup2024: நேபாளத்தை வீழ்த்திய நியூசிலாந்து அணி

Published by
Ramesh

19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்றைய 7வது போட்டியில் நியூசிலாந்து அணியும், நேபாளம் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் ஸ்னீஹித் ரெட்டி அபாரமாக விளையாடி 147 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நேபாளம் அணி ஆரம்பம் முதலே நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

இறுதியில் நேபாளம் அணியால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 238 ரன்களே எடுக்க முடிந்தது.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இலங்கை – ஜிம்பாப்வே

இன்றைய மற்றொரு 19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 48.3 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 13.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை காரணம் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

பின்னர் ஆட்டம் மிகுந்த தாமதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கியது. இதன் போது இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி 89 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன்மூலம் இலங்கை அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Published by
Ramesh

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

2 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

4 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

5 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

5 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

6 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

6 hours ago