14.3 ஓவரில் 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்திய அணியை எளிதில் வீழ்த்தியது.
உலக கோப்பை டி20 போட்டிதொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இன்றைய போட்டியில் நியூசிலாந்து, இந்தியா மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினார்.
ஆனால் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இஷன் கிஷன் 4 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ரோஹித் சர்மா முதல் ஆட்டத்தில் டக் அவுட் ஆனதால், இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து குப்டிலிடம் கேட்சை கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல் 11 ரன்களுடன் வெளியேற அடுத்து வந்த கேப்டன் கோலி வந்த வேகத்தில் 9 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா, ஜடேஜா இருவரும் சீராக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 23 ரன் எடுத்தார். நிதானமாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா 26* ரன் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.
இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தனர். நியூஸிலாந்து அணியில் டிரெண்ட் போல்ட் 3 , இஷ் சோதி 2 விக்கெட்டை பறித்தனர்.
120 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலகுடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்க முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் குப்தில் 20 ரன் எடுத்திருந்த நிலையில் பும்ரா வீசிய ஓவரில் தாகூரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இன்னோர் தொடக்க வீரர் மிட்ச்சல் 35 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து பும்ரா ஓவரில் வெளியேறினார். இறுதியில் 14.3 ஓவரில் 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி வாகை சூடியது
கேப்டன் வில்லியம்சன் பொறுப்புடன் நிதானமாக விளையாடி 33 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். கன்வே 2 ரன்களுடன் களத்தில் நின்றார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…