NZvsSL: டாஸ் வென்றது நியூசிலாந்து..! பேட்டிங் செய்யத் தயாராகும் இலங்கை..!

NZvsSL Toss

NZvsSL: நடப்பு ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில், 41வது லீக் போட்டியானது இன்று நடைபெறுகிறது. பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில், நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோதுகிறது.

நியூசிலாந்து அணி 4 போட்டிகளில் வெறி பெற்று, புள்ளிப் பட்டியலில் 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால், ரன்ரேட் (+0.398) அல்லது புள்ளிகளின் அடிப்படையில் அரைஇறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.

ஆனால் இலங்கை அணி 8 போட்டிகளில் ஈரானில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் 4 புள்ளிகள் மட்டுமே எடுத்து தொடரை விட்டு வெளியேறியது. இருந்தும் இந்த போட்டியில் தங்களது திறமையை நிரூபிக்க, கடும் பயிற்சிகள் மேற்கொண்டு களமிறங்குகிறது.

இந்த இரண்டு அணிகளும் இதுவரை 101 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து 51 முறை வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிராக 41 முறை வென்றுள்ளது. இதில் 8 போட்டிகள் முடிவில்லாமலும், 1 போட்டி சமமாகவும் முடிந்துள்ளது.

தற்போது, இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டுள்ளது.  இதில் நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இலங்கை

பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ்(w/c), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க

நியூசிலாந்து

டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன்(C), டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டாம் லாதம்(W), டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட், லாக்கி பெர்குசன்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்