INDvsNZ : டாஸ் தோற்ற ரோஹித் சர்மா! முடிவை மாற்றிய நியூசிலாந்து கேப்டன்!

சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் பேட்டிங் தேர்வு செய்தார். 

INDvNZ - ICC CT 2025 Final

துபாய் : கடந்த பிப்ரவரி 19ஆம் தேதியன்று சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின. இந்தாண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தியது. இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத காரணத்தால் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்தன.

இறுதி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடுவதால் இந்த போட்டியும் துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்கிறது. இதற்கு முன்னர் 2000 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி மற்றும் 2019 உலகக்கோப்பை அரையிறுதி போட்டிகளில் இந்திய அணி நியூஸிலாந்திடம் தோல்வி கண்டதால் இந்த போட்டியில் அதற்கு பதிலடி கொடுத்து கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல, 2000 ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை தவிர்த்து வேறு எந்த ஐசிசி குறிப்பிட்ட ஓவர்களுக்கான கோப்பையையும் நியூஸிலாந்தும் அணி வென்றதில்லை. (2021-ல் டெஸ்ட் சாம்பியன்ஸ் பட்டம் வென்றது) இதனால் இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய முனைப்பில் விளையாட உள்ளது .

டாஸ் :

இப்படியான முக்கியமான இறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். கடந்த மார்ச் 2இல் நடந்த லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்து 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வி கண்டது. அதனை அடுத்து தற்போது டாஸ் ஜெயித்து பேட்டிங் தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஒருமுறை கூட டாஸ் ஜெயிக்கவில்லை. அப்படி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. டாஸ் தோற்றபிறகு ரோஹித் சர்மா பேசுகையில், டாஸ் பற்றி கவலையிலை. பவுலிங், பேட்டிங் என இரு விதங்களிலும் இந்த மைதானத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் என நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.

இந்திய அணி சார்பாக..,

கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சகரவர்த்தி ஆகியோர் விளையாட உள்ளனர்.

நியூசிலாந்து அணி சார்பாக..,

கேப்டன் மிட்செல் சான்ட்னர் தலைமையில் வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம்(விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், கைல் ஜேமிசன், வில்லியம் ஓரூர்கே, நாதன் ஸ்மித் ஆகியோர் விளையாட உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்