பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து.! கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் களமிறங்கும் இந்திய அணி.!
நியூசிலாந்தில் நடைபெற்று வரும் டி20 தொடரின் 3வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஹார்திக் பாண்டியா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு விளையாட சென்றுள்ளது. மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இளம் வீரர்களுடன் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது.
இதில் முதல் டி20 போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இன்று 3வது ஆட்டம் நடைபெற உள்ளது. மழையின் காரணாமாக தாமதமாக தொடங்க உள்ள நிலையில் தற்போது இந்த ஆட்டத்திற்கு டாஸ் போடப்பட்டது.
இதில் டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுதி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி முதற்கட்டமாக பந்துவீச தயாராகி வருகிறது.
இந்திய அணி – ஹார்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), களமிறங்க உள்ளனர். இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
நியூசிலாந்து அணி – டிம் சவுதி (கேப்டன்), ஃபின் ஆலன், டெவன் கான்வே, மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, ஆடம் மில்னே, லாக்கி பெர்குசன்.