WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!
இன்று நடைபெற்ற இரண்டாம் அரை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை த்ரில்லாக வீழ்த்தியது.
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென்னாபிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று 2-ஆம் அரை இறுதி போட்டியானது நடைபெற்றது.
இதில், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியும், தென்னாபிரிக்கா மகளிர் அணியும் மோதியது. இதில், டாஸ் வென்ற நியூஸிலாந்து மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, தொடக்கத்தில் விளையாடிய இரு வீராங்கனைகளும் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர்.
ஆனால், அவர்களது விக்கெட் இழப்பிற்கு பின் அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சரிவர விளையாடாததால் நியூஸிலாந்து அணியின் ஸ்கோர் உயராமலே இருந்தது. மேலும், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியின் கடினமான பந்து வீச்சை சமாளிக்க நியூஸிலாந்து அணி தட்டி தட்டியே ரன்களைச் சேர்த்தது.
இதனால், இறுதியில் 20 ஓவர்களும் பேட்டிங் செய்த நியூஸிலாந்து மகளிர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஜார்ஜியா ப்ளிம்மர் 33 ரன்களும், சுசி பேட்ஸ் 26 ரன்களும், இசபெல்லா கேஸ் 20 ரன்களும் எடுத்திருந்தனர்.
அதே போல, நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக டீன்ட்ரா டாட்டின் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார். அதனைத் தொடர்ந்து, 129 என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பேட்டிங் களமிறங்கியது. அதன்படி, தொடக்கத்தில் களமிறங்கிய வீராங்கனைகள் நல்ல ஒரு தொடக்கத்தை தொடங்கும் போது ஆட்டமிழந்தனர்.
அதன் பிறகும், பேட்டிங் களமிறங்கிய வீராங்கனைகளும் மேற்கொண்டு ரன்களை சேர்க்க தவிறியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. இதனால், கடைசியில் களமிறங்கிய வீராங்கனைகளுக்கு போட்டி மேலும் அழுத்தமான ஒன்றாக மாறியது. இருப்பினும், அந்த அணியின் ஆல் ரவுண்டரான டீன்ட்ரா டாட்டின் மட்டும் நின்று திடிரென அதிரடி காட்டினார்.
இதனால், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியின் ஸ்கோர் உயர்ந்ததைத் தொடர்ந்து இலக்கை நோக்கியும் விரைவாக நகர்ந்தது. போட்டியை மாற்றும் தருணத்தில் அதிரடியாக விளையாடி கொண்டிருந்த டீன்ட்ரா டாட்டின் துரதிஷ்டவசமாக 33 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பிறகு களத்திலிருந்த அஃபி பிளெட்சர் மற்றும் ஜைதா ஜேம்ஸ் இருவரும் முடிந்த வரை அதிரடி காட்டினார்கள். ஆனால், விறுவிறுப்பாக சென்ற போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் ஜைதா ஜேம்ஸ் ஆட்டமிழக்க போட்டி தலைகீழாக மாறியது. இருப்பினும், 6 பந்துக்கு 15 ரன்கள் எடுக்க வேண்டி இருந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியே வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சுசி பேட்டின் அபார பந்து வீச்சால் களத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனையான அஃபி பிளெட்சரால் பவுண்டரி அடிக்க முடியவில்லை. இதன் காரணமாக, நியூஸிலாந்து மகளிர் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் திரில்லாக வெற்றிப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால், நாளை மறுநாள் நடைபெறும் இறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியும், நியூஸிலாந்து மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.