இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று 3-வது டி-20 போட்டி நடைபெறுகிறது.இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3 -வது டி -20 போட்டி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் ( Seddon Park) மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி வீரர்கள் விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், ஜடேஜா, மணிஷ் பாண்டே, பும்ரா, சாஹல், முகமது ஷமி, ஷர்துல் தாகூர், சிவம் துபே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
நியூசிலாந்து அணி வீரர்கள் விவரம் :
கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் குப்தில், டிம் செய்பெர்ட் , டெய்லர், சான்ட்னர் , காலின் முன்ரோ, கிராண்ட்ஹோம், பென்னட்,டிம் சவுதி, சோதி, ஸ்காட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும்.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…