தொடரை கைப்பற்றுமா? இந்திய அணி முதலில் பேட்டிங்

Default Image

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று 3-வது டி-20 போட்டி நடைபெறுகிறது.இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.  

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி  இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும்  3 -வது டி -20  போட்டி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் ( Seddon Park) மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து  அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணி வீரர்கள் விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், ஜடேஜா, மணிஷ் பாண்டே, பும்ரா, சாஹல், முகமது ‌ஷமி, ‌ஷர்துல் தாகூர், சிவம் துபே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணி வீரர்கள் விவரம் :

கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் குப்தில், டிம் செய்பெர்ட் , டெய்லர், சான்ட்னர் , காலின் முன்ரோ, கிராண்ட்ஹோம், பென்னட்,டிம்  சவுதி, சோதி, ஸ்காட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்