நியூஸிலாந்து 93 பந்திற்கு பிறகு அடித்த பவுண்டரி !
நேற்றைய இறுதிப்போட்டியில் இங்கிலாந்து , நியூஸிலாந்து அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது .முதலில் இறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை பறிகொடுத்து 241 ரன்கள் அடுத்தது.
பின்னர் 242 ரன்கள் இலக்குடன் களமிங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 241 ரன்கள் எடுத்தது இதனால் இப்போட்டி டையில் முடிந்தது.பிறகு சூப்பர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் அடித்தது.
பின்னர் 16 ரன்களுடன் இறங்கிய நியூஸிலாந்து அணி 15 ரன்கள் அடித்ததால் சூப்பர் ஓவர் போட்டியும் டை ஆனது. இதனால் இறுதி போட்டியில் அதிக பவுண்டரி அடித்த அணிக்கு வெற்றி என அறிவிக்கப்பட்டது.அதன் படி நியூஸிலாந்து அணியை விட்ட இங்கிலாந்து அணி அதிக பவுண்டரி அடித்து இருந்ததால் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது.
இப்போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி ஆதில் ரஷித் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தில் கேப்டன் கேன் வில்லியம்சன் பவுண்டரி அடித்தார்.அதன் பின்னர் அடுத்த பவுண்டரி அடிக்க 93 பந்துகளை நியூஸிலாந்து அணி எடுத்து கொண்டது. நியூஸிலாந்து அணி அடுத்த பவுண்டரியை 35 -வது ஓவரின் நான்காவது பந்தில் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் ஜேம்ஸ் நீஷம் அடித்தார்.