பவர் ப்ளே ஓவரில் மிக குறைந்த ரன்கள் அடித்த அணியில் நியூஸிலாந்து முதலிடம் !
நடப்பு கோப்பையில் அரைஇறுதி போட்டியில் நேற்று இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதியது.இப்போட்டி மைதானத்தில் நடை பெற்றது.டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்டில் ,ஹென்ரி நிக்கோல்ஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே பும்ரா வீசிய வேக பந்து வீச்சில் மார்ட்டின் குப்டில் 1 ரன்னில் வெளியேறினர்.
இப்போட்டியில் நியூஸிலாந்து அணி பவர் ப்ளே ஓவரான முதல் பத்து ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து குறைந்த ரன்னான 27 ரன்கள் மட்டுமே அடுத்தது.
இதற்கு முன் லீக் போட்டியில் இந்திய அணி ,இங்கிலாந்து அணியுடன் விளையாடிய போது முதல் பத்து ஓவரில் குறைந்த ரன்கள் ஆன 28 மட்டுமே எடுத்தது.மேலும் நடப்பு உலகக் கோப்பையில் நியூஸிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 30 ரன்களும் , ஆஸ்திரேலிய அணியுடன் மோதும் 31 ரன்களும் பவர் ப்ளே ஓவரான முதல் பத்து ஓவரில் எடுத்து இருந்தது.
இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் போட்டியில் பவர் ப்ளே ஓவரில் மிக குறைந்த ரன்கள் அடித்து பட்டியலில் நியூஸிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. நியூஸிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பையில் 3 முறை மிக குறைந்த ரன்கள் அடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.