இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டி -20 போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி நியூசிலாந்து அணி முதலில் தனது பேட்டிங்கை தொடங்கியது.தொடக்க ஆட்டக்காரர்களாக கப்டில் மற்றும் முன்ரோ ஆகியோர் களமிறங்கினார்கள்.இந்த ஜோடி ஓரளவு நியூசிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.இந்த சமயத்தில் கப்தில் 33 ரன்களில் வெளியேறினார்.இவருக்கு பின்னால் முன்ரோவும் 26 ரன்களில் வெளியேறினார். இந்த ஜோடி சென்றவுடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன்,கிராண்ட் ஹோம் மற்றும் டெய்லர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். வில்லியம்சன் 14 ரன்கள் ,கிராண்ட் ஹோம் 3 ரன்கள்,டெய்லர் 18 ரன்கள் எடுத்தனர்.
பின்பு களமிறங்கிய செய்பெர்ட் ஒரளவு தாக்குப்பிடித்து 33 ரன்கள் அடித்தார். இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் செய்பெர்ட் 33*,சட்னர் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் ஜடேஜா 2 விக்கெட்டுகள்,பூம்ரா ,தாகூர்,துபே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்..இதனையடுத்து 133 ரன்கள் அடித்தால் வென்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…