நெதர்லாந்திற்கு 323 ரன்கள் நிர்ணயித்த நியூசிலாந்து..!
ஒருநாள் உலக்கோப்பை தொடரின் இன்று 6-வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியில் தொடங்க வீரர்களாக கான்வே, வில் யங் களமிங்கினர். கான்வே ஆட்டம் தொடங்கியது முதலே நிதானமாக விளையாட இருப்பினும் பாஸ் டி லீடே-விடம் கேட்சை கொடுத்து 32 ரன் எடுத்து வெளியேறினார்.
பின்னர் களம்கண்ட ரச்சின் ரவீந்திரன் உடன் வில் யங் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாட தொடங்கினர். இவர்கள் இருவரின் கூட்டணியில் 77 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய வில் யங் பாஸ் டி லீடே-விடம் கேட்சை கொடுத்து 70 ரன்னில் பெவிலியன் திரும்பினர். இதில் 7 பவுண்டரி 2 சிக்ஸர் அடங்கும். நிதானமாக விளையாடி வந்த ரச்சின் ரவீந்திரன் அரைசதம் விளாசி 51 ரன் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். ரவீந்திரன் விக்கெட்டை இழந்த போது நியூசிலாந்து 3 விக்கெட் பறிகொடுத்து 185 ரன்கள் எடுத்து இருந்தது. பிறகு மத்தியில் கை கோர்த்த டேரில் மிட்செல், லாதம் அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர்.
இவர்கள் இருவரும் 101 சேர்த்தனர். இதில், லாதம் நிதானமாக விளையாடி அரைசதம் விளாசி 53 ரன் எடுத்தார். டேரில் மிட்செல் 48 ரன் எடுக்க இறுதியில் களமிங்கிய சான்ட்னர் வந்த வேகத்தில் 2 சிக்ஸர், 3 பவுண்டரி என மொத்தம் 36 ரன்கள் விளாசினார். இறுதியாக நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 322 ரன்கள் குவித்தனர். நெதர்லாந்து அணியில் ஆர்யன் தத், வான் டெர் மெர்வே , பால் வான் மீக்கெரென் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.