INDvsNZ : மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்.! 252 ரன்கள் ‘டார்கெட்’ வைத்த நியூசிலாந்து!
சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 251 ரன்கள் எடுத்துள்ளது.

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி பந்துவீச தொடங்கியது.
தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ஆரம்பத்தில் ஓரளவு ரன்கள் குவித்தது போல இருந்தாலும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது நியூசிலாந்து அணி. தொடக்க வீரர் வில் யங் 15 ரன்களிலும், ரச்சன் ரவீந்திரா 37 ரன்களில் அவுட் ஆகினார்.
கேன் வில்லியம்சன் 11 ரன்கள் ரன்களில் அவுட் ஆகினார். டாம் லதாம் 14 ரன்களில் அவுட் ஆகினார். டேரில் மிட்செல் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். க்ளென் பிலிப்ஸ் 34 ரன்களில் அவுட் ஆகினார். கேப்டன் மிட்செல் சான்ட்னர் 8 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். மைக்கேல் பிரேஸ்வெல் 53 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்துள்ளது.
குல்தீப் யாதவ் 10 ஓவர்கள் வீசி 40 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். வருண் சக்கரவர்த்தி 10 ஓவர்கள் வீசி 45 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். முகமது சமி 9 ஓவர்கள் வீசி 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.