இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி -20 போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி நியூசிலாந்து அணி முதலில் தனது பேட்டிங்கை தொடங்கியது.தொடக்க ஆட்டக்காரர்களாக கப்டில் மற்றும் முன்ரோ ஆகியோர் களமிறங்கினார்கள்.இந்த ஜோடி நியூசிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.இந்த சமயத்தில் கப்தில் 30 ரன்களில் வெளியேறினார்.பின்பு வில்லியம்சன் களமிறங்கிய சிறிது நேரத்தில் முன்ரோ 59 ரன்களுடன் தாகூர் பந்துவீச்சில் வெளியேறினார். இவருக்கு அடுத்தபடியாக களமிறங்கிய கிராண்ட் ஹோம் ரன் எதுவும் எடுக்காமல் ஜடேஜா பந்துவீச்சில் துபே விடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.இதே சமயத்தில் வில்லியம்சனும் சாகல் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து 51 ரன்னில் வெளியேறினார்.பின்னர் இறுதியில் வந்த ராஸ் டெய்லர் வந்தது முதல் அதிரடியாக விளையாடி அணியின் ரன்னை உயர்த்தினார்.ஒரு முனையில் இவர் ரன்னை உயர்த்த மறுமுனையில் டிம் 1 ரன்னில் வெளியேறினார்.
இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் டெய்லர் 54*,சட்னர் 2 * ரன்களுடன் இருந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் பூம்ரா ,தாகூர்,சாகல்,துபே ,ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.இதனையடுத்து 204 ரன்கள் அடித்தால் வென்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…