நியூசிலாந்து அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை கைவிட்ட பிறகு, வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் மைதானத்தில் சோதனை.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டது. லாகூரில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் விளையாட திட்டமிடப்பட்டது. அதன்படி, பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானத்தில் நேற்று முதல் ஒருநாள் போட்டி தொடங்க இருந்த நிலையில், நியூசிலாந்து அரசு எச்சரிக்கையால் போட்டி ரத்து செய்யப்பட்டது.
நியூசிலாந்து அணி வீரர்கள் பயங்கரவாதிகளால் தாக்கப்படலாம் என்று அந்நாட்டு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனை கருத்தில் கொண்டு பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் விளையாட சென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி அவசரமாக நாடு திரும்புகிறது.
பாகிஸ்தானை விட்டு அணி வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது. ரத்து செய்யப்பட்டது குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னும் ஆதரிப்பதாகவும், வீரர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து, நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாதுகாப்பு எச்சரிக்கையை காரணம் காட்டி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை கைவிட்ட பிறகு, வெடிகுண்டு செயலிழக்கும் குழு மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மைதானத்தில் சோதனையில் ஈடுபட்டனர். மைதானத்தை சோதனையிடும் வீடியோ மற்றும் படங்கள் சமூக வலைதளத்தில் வரைலாகி வருகிறது.
ஆனால், இதுவரை அச்சுறுத்தலுக்கான எந்த தடையும் கண்டுபிடிக்கவில்லை என தகவல் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…