ஆஸ்திரேலியாவிடம் மண்டியிட்ட நியூஸிலாந்து ! இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய இந்திய அணி !

Default Image

நேற்று நடைபெற்ற  இரண்டாவது  போட்டியில் நியூசிலாந்து , ஆஸ்திரேலியா அணி மோதியது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இப்போட்டி  நடைபெற்றது .போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , ஆரோன் பிஞ்ச் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து தடுமாறிய ஆரோன் பிஞ்ச் 15 பந்தில் 8 ரன்னில் வெளியேற பிறகு  உஸ்மான் கவாஜா களமிறங்கினர்.
சிறப்பாக  விளையாடிய வார்னர் 16 பந்தில் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். உஸ்மான் கவாஜா , ஸ்மித் இவர்களின் கூட்டணியில் அதிரடி காட்டுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஸ்மித் 5 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர்மத்தியில் களமிறங்கிய அலெக்ஸ் கேரி , உஸ்மான் கவாஜா இவர்கள்  இருவரின் கூட்டணியில் அணியின் ரன்களை உயர்த்தினர்.இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இருவருமே அரைசதத்தை நிறைவு செய்தனர்.பிறகு களமிறங்கிய வீரர்கள் அனைவருமே  சொற்ப ரன்னில் வெளியேறினர்.

இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 243 ரன்கள் அடித்தனர். நியூஸிலாந்து அணி பந்து வீச்சில் ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டையும் ,லாக்கி பெர்குசன் ,ஜேம்ஸ் நீஷம் இருவரும் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.

244 ரன்கள் இலக்குடன் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்டில் ,
ஹென்றி நிக்கோல்ஸ் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து தடுமாறிய விளையாடினர்.
இந்நிலையில் ஹென்றி நிக்கோல்ஸ் 20 பந்திற்கு 8 ரன்களுடன் வெளியேறினார்.பின்னர் கேன் வில்லியம்சன் இறங்கினர்.நிதானமாக விளையாடி வந்த மார்ட்டின் குப்டில் 20 ரன்னில் அவுட் ஆனார்.பிறகு ரோஸ் டெய்லர் களமிறங்க கேன் வில்லியம்சன் உடன் கூட்டணியில் இணைந்து அணியின் ரன்களை உயர்த்தினார்.
அடுத்தடுத்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற நியூஸிலாந்து அணி 43.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 157 ரன்கள் எடுத்து  86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டை பறித்தார்.
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Maharashtra Election 2024 Result
bjp bihar
Priyanka Gandhi - Wayanad
vijay tvk
Wayanad By polls
congress win karnataka 2024