அரையிறுதியில் நியூசிலாந்து-இந்தியா மோதல்… பழைய பகையை தீர்க்குமா இந்தியா..!

இந்தியா நடத்தும் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டி இன்றுடன் முடிவடைகிறது. அரையிறுதிக்கு முதல் 4 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்குள் சென்றுள்ளது.

இந்த உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளது. இதனால் 4-வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியும் , முதலிடத்தில் உள்ள இந்திய அணியும் மோதுகிறது. கடந்த 2019 உலகக்கோப்பையின் மான்செஸ்டரில் நடந்த அரையிறுதியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை நியூசிலாந்து அணி வீழ்த்தியது. இதனால் ஐசிசி போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே பழைய பகை உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், முந்தைய அரையிறுதிக்கு பழிவாங்க ரோஹித்துக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது என ரசிகர்கள் கூறுகின்றனர். இம்முறை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி நவம்பர் 15ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. ரோஹித்தின் சொந்த மைதானமும் இதுதான். அதே உலகக்கோப்பையில் இலங்கையை 55 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

கடந்த உலகக்கோப்பையை விட இந்த முறை இந்திய அணி மிகவும் பலமாக உள்ளது. அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு முழு ஃபார்மில் உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ரோஹித், விராட் கோலி, சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் வலுவான நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் பந்து மற்றும் பேட்டிங்கில் கலக்கி வருகிறார்.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ்மைதானத்தில் தென்னாபிரிக்கா அணியும், ஆஸ்திரேலியா அணியும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மோதுகின்றன.  ஆஸ்திரேலியா இதற்கு முன் 5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதேசமயம் தென்னாபிரிக்கா ஒரு முறை கூட உலகக்கோப்பையை கைப்பற்றவில்லை.

தென்னாபிரிக்கா அணி பலமுறை சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேறி வரும் இருப்பினும் உலகக்கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. ஆனால் இம்முறை டெம்பா பவுமாவின் தலைமையில் தென்னாப்பிரிக்க அணி தனது முதல் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இந்த இரண்டாவது அரையிறுதி நவம்பர் 16 அன்று நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்