SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதியதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி வீரர்கள், தென்னாப்பிரிக்க பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். ஸ்கோர் 48 ரன்களில் வில் யங் (21) வெளியேறிய பின், ரச்சின், வில்லியம்சன் இருவரும் சதமடிக்க, மிடில் ஆர்டரில் விளையாடிய பிலிப்ஸ் அதிரடி காட்டி ஸ்கோரை உயர்த்தினார். அட ஆமாங்க… ரச்சின் ரவீந்திரன் 101 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 108 ரன்கள் எடுத்தார், வில்லியம்சன் 94 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 102 ரன்கள் எடுத்தார்.
டேரில் மிட்செல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் 49-49 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடினர்.தென்னாப்பிரிக்கா தரப்பில் , லுங்கி நிகிடி (3), ககிசோ ரபாடா (2) மற்றும் வியான் முல்டர் (1) ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இருப்பினும், கடைசி ஓவர்களில் டேரில் மிட்செல் அற்புதமான இன்னிங்ஸை விளையாடி அணியின் ஸ்கோரை 300க்கு மேல் கொண்டு சென்றார். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 362 ரன்கள் குவித்தது.
இந்த இமாலய இலக்கை நோக்கி களமிங்கிய தென்னாப்பிரிக்கா அணி ரன்களை எடுத்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் 67 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். துஷேன் 69 ரன்களையும், கேப்டன் பவுமா 56 ரன்களும் எடுத்தனர்.
தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்தது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி வரும் மார்ச் 9 ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இறுதிப் போட்டியில் கடும் பார்மில் இருக்கும் இந்த இரு அணிகளில் யார் சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025