வெற்றி கண்டு என்ன பயன்? உகாண்டாவை எளிதில் வீழ்த்தியது நியூஸிலாந்து..!
டி20I: டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணி எளிமையாக உகாண்டா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையின், 32-வது லீக் போட்டியில் இன்று நியூஸிலாந்து அணியும், உகண்டா அணியும் பிரைன் லாரா மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி உகாண்டா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
நியூஸிலாந்து அணயின் அபார பந்து வீச்சால் உகாண்டா அணியால் தாக்கு புடிக்க முடியாமல், 18.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 40 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக டிம் சௌத்தி 3 விக்கெட்டுகளும், போல்ட், சான்ட்னர், ரவீந்திரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.
அதனை தொடர்ந்து பேட்டிங் களமிறங்கிய நியூஸிலாந்து அணி அதிரடியாகவே விளையாடினார்கள், அதனால் 5.2 ஓவர்களில் 1 விக்கெட்டுகளை இழந்து 41 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக கான்வே 15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். மேலும், இந்த வெற்றியின் மூலம் ரன்ரேட்டில், முன்னேறினாலும், புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகள் பெற்றாலும் இந்த வெற்றியை கொண்டாட முடியாமலே இருந்து வருகின்றனர்.
அதற்கு காரணம் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் பெற்ற தோல்வி தான். இதனால், நியூஸிலாந்து அணி தற்போது நடந்து வரும் இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறி உள்ளது. மேலும், வருகிற ஜூன்-17ம் தேதி பப்புவா நியூ கினி அணியுடன் இந்த தொடரின் கடைசி லீக் போட்டியில் நியூஸிலாந்து அணி விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.