இந்தியாவை 92 ரன்களில் சுருட்டியது மிக்க மகிழ்ச்சி – நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன்

Published by
Venu

இந்தியாவை 92 ரன்களில் சுருட்டியது மகிழ்ச்சி என்று  நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன்  தெரிவித்துள்ளார்.

நேற்று  நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 4 -வது ஒருநாள் போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்றது.இதில் இந்திய படைகளானது ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கியது.

இதில் ஹாமில்டன் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன் பின்னர் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி தொடர்ச்சியாக விக்கெட்டை பறிகொடுத்தது.கடைசியாக இந்திய அணி 30.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 92 ரன்கள் மட்டுமே அடித்தது.இந்திய அணியில் ஒரு வீரரும் கூட 20 ரன்களை தாண்ட வில்லை.

நியூசிலாந்து பந்துவீச்சில் டிரண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளையும், கிராண்ட் ஹோமே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினர்.

 

இதனையடுத்து 93 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.நியூசிலாந்து அணி 14.4 ஒவர்களில் 2 விக்கெட்டை இழந்து  வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா  முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் போட்டி  குறித்து  நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் கூறுகையில்,உலகின் சிறந்த அணியுடன் மோதிய அனுபவமாகவும், எங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பாகவும் இருந்தது.அதேபோல் இப்படி ஒரு வெற்றியை பெறுவோம் என எதிர்பார்க்கவில்லை.இந்தியாவை 92 ரன்களில் சுருட்டியது மகிழ்ச்சி என்றும்  நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன்  தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

Live : சட்டபேரைவை கூட்டத்தொடர் முதல்..திருப்பதி கூட்ட நெரிசல் வரை!

சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…

3 minutes ago

என்னது கோவாவில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புள்ளி விவரம்!

கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…

24 minutes ago

தெற்கு கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத் தீ! 5 பேர் பலி!

அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…

1 hour ago

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித் மார்டின் கப்டில்! முக்கிய பொறுப்பு கொடுக்கும் நிர்வாகம்?

நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…

2 hours ago

திருப்பதி கூட்ட நெரிசல் : மன்னிப்பு கேட்ட தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு!

திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…

2 hours ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கடும் கண்டனம் தெரிவித்த வன்னி அரசு!

கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…

3 hours ago