இந்தியாவை 92 ரன்களில் சுருட்டியது மிக்க மகிழ்ச்சி – நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன்
இந்தியாவை 92 ரன்களில் சுருட்டியது மகிழ்ச்சி என்று நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
நேற்று நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 4 -வது ஒருநாள் போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்றது.இதில் இந்திய படைகளானது ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கியது.
இதில் ஹாமில்டன் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன் பின்னர் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி தொடர்ச்சியாக விக்கெட்டை பறிகொடுத்தது.கடைசியாக இந்திய அணி 30.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 92 ரன்கள் மட்டுமே அடித்தது.இந்திய அணியில் ஒரு வீரரும் கூட 20 ரன்களை தாண்ட வில்லை.
நியூசிலாந்து பந்துவீச்சில் டிரண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளையும், கிராண்ட் ஹோமே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினர்.
இதனையடுத்து 93 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.நியூசிலாந்து அணி 14.4 ஒவர்களில் 2 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் போட்டி குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் கூறுகையில்,உலகின் சிறந்த அணியுடன் மோதிய அனுபவமாகவும், எங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பாகவும் இருந்தது.அதேபோல் இப்படி ஒரு வெற்றியை பெறுவோம் என எதிர்பார்க்கவில்லை.இந்தியாவை 92 ரன்களில் சுருட்டியது மகிழ்ச்சி என்றும் நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.