ஐசிசி மகளிர் டி-20 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் மகளிருக்கான ஐசிசி டி-20 உலகக்கோப்பையில் நேற்று A – பிரிவைச்சேர்ந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் போலந்து பார்க் மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்று நியூசிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் பெர்னாடின் பெசுய்டன்ஹவுட்(32 ரன்கள்) மற்றும் பேட்ஸ்(56 ரன்கள்) என சிறப்பான தொடக்கம் அமைத்துக்கொடுக்க அதன் பின் இறங்கிய அமெலியா கெர் 66 ரன்கள் அடித்து கொடுத்தார்.
இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 162 ரன்கள் குவித்தது. 163 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் கேப்டன் சாமரி அதபத்து (19 ரன்கள்) மற்றும் மல்ஷா ஷெஹானி(10 ரன்கள்) எடுக்க மற்ற வீராங்கனைகள் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து 60 ரன்களில் இலங்கை அணி ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்து சார்பில் அமெலியா கெர் மற்றும் லியா தஹுஹு தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனால் நியூசிலாந்து அணி 102 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது. அமெலியா கெர் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியுடன் நியூசிலாந்து அணி 4 புள்ளிகளுடன் குரூப்-A வில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…