20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி, நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு புதன்கிழமை நடந்த பரபரப்பான முதல் அரையிறுதியில் இங்கிலாந்தை நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், டேரில் மிட்செல் 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்தார், டெவோன் கான்வே 38 பந்துகளில் 46 ரன்களும்,ஜேம்ஸ் நீஷம் 11 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வெற்றிக்கான முக்கியப் பங்கு வகித்தார்.
கிறிஸ் வோக்ஸ் (2/36), லியாம் லிவிங்ஸ்டோன் (2/22) ஆகியோர் இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக பந்து வீசினர்.
முன்னதாக, பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, மொயீன் அலியின் 51 நாட் அவுட் மற்றும் டேவிட் மலான் (42), ஜோஸ் பட்லர் (29) மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் (17) ஆகியோரின் பயனுள்ள பங்களிப்பால் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…