IPL 2024 : வந்துவிட்டது புதிய ரூல்ஸ் ..! பட்டயை கிளப்ப போகும் பவுலர்ஸ் ..!

IPL Rules [file image]

IPL 2024 : கிரிக்கெட் ரசிகர்களின் ஒரு வருட எதிர்ப்பார்ப்பாக இருந்து வரும் 17-வது ஐபிஎல் தொடர் நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்நிலையில் நேற்று பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளுக்கான புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சையத் முஸ்டாக் அலி கோப்பை போட்டிகளில் பிசிசிஐ புதிய விதிகளை கொண்டு வந்தது.

Read More :- இந்த ஐபிஎல் 2024 தொடருக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பார்ப்புகள் தெரியுமா ?

இது வேக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. அது என்னவென்றால் இனி வேக பந்து வீச்சாளர்கள் பவுலிங் செய்யும் ஒரு ஓவரில் 2 பவுன்சர்களை வீசலாம் என்பது தான். இதற்கு முன்பு ஒரு பவுலர் ஒரு ஓவரில் ஒரு பவுன்சர் வீசுவதற்கு மட்டுமே அனுமதி கொடுக்கபட்டது. ஒரே ஓவரில் 2-வது பவுன்சரை வீசினால் அது ‘நோபால்’ என நடுவர் அறிவித்து விடுவார். இது சையத் முஸ்டாக் அலி போட்டிகளில் இந்த ஆண்டு நடை முறைக்கு வந்தது. தற்போது நடைபெற போகும் இந்த ஐபிஎல் தொடரிலும் பிசிசிஐ இதை அமல் படுத்தியுள்ளது.

அதே போல ஒரு பேட்ஸ்மேன் ஸ்டெம்பிங் ஆகும் போது மூன்றாம் நடுவர் அந்த ஸ்டெம்பிங்கை மட்டுமே சரிபார்ப்பார். ஆனால் தற்போது, முதலில் அவர் கேட்ச் ஆனாரா அதாவது அவரது பேட்டில் பந்து தொட்டுள்ளதா என மூன்றாம் நடுவர் சரிபார்ப்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதுவும் ஒரு நல்ல விதி தான் என ரசிகர்கள் மத்தியில் பேச்சுக்கள் நிலவி வருகிறது.

Read More :- இன்ஸ்டாவில் அதிக ஃபாலோவர்ஸ் கொண்ட ஐபிஎல் அணி எது தெரியுமா ?

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் போல, விளையாடும் அணிகள் வைடு, நோ பால்களையும் ரிவ்யூ (Review) செய்யலாம் எனவும் ஒரு இன்னிங்சில் ஒரு அணி 2 முறை ரிவ்யூ எடுத்துக்கொள்ளலாம் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் ஐசிசி (ICC) புதியதாக அறிமுகப்படுத்திய Stop Clock முறை ஐபிஎல் தொடரில் அமல்படுத்தவில்லை எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்