கிரிக்கெட்டில் புதிய விதி.. எதிரணிக்கு 5 ரன்கள்.. ஐசிசி அறிவிப்பு..!

2023 ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு கிரிக்கெட் விதிகளை ஐசிசி மாற்றியுள்ளது. போட்டியின் வேகத்தை அதிகரிக்க புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு போட்டியில் ஒரு ஓவர்முடித்து அடுத்த ஓவரைத் தொடங்க பந்துவீச்சாளர் 1 நிமிடம் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். மூன்று முறை அடுத்த ஓவரைத் தொடங்க பந்துவீச்சாளர் 1 நிமிடத்திற்கு மேல் எடுத்துக் கொண்டால் பந்துவீசும் அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும் என்று கிரிக்கெட் நிர்வாகக் குழு ஐசிசி அறிவித்துள்ளது.
இந்த விதி தற்போது ஆண்கள் கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் பொருந்தும். முதற்கட்டமாக இந்த விதி சோதனைக்காக அமல்படுத்தப்பட்டு அதன் பயன் மற்றும் தீமைகள் கருத்தில் கொண்டு நிரந்தரமாக அமல்படுத்தலாம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது. இந்த விதி டிசம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சீசனில் முதல் முறை தவறு செய்தால், பந்துவீச்சு அணியின் கேப்டனுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஒரு சீசனில் இரண்டாவது முறை தவறு செய்தால், பந்துவீச்சு அணியின் கேப்டனுக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஒரு சீசனில் மூன்றாவது முறை தவறு செய்தால், பந்துவீச்சு அணியின் கேப்டனுக்கு 30 லட்சம் அபராதம் விதிக்கப்படும் மற்றும் ஒரு போட்டிக்கு தடை விதிக்கப்படும்.
லேட்டஸ்ட் செய்திகள்
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025