டி20 உலகக்கோப்பையில் படைக்கப்பட்ட புதிய சாதனைகள் …! பட்டியலை வெளியிட்ட ஐசிசி..!
Published by
அகில் R
ஐசிசி : கடந்த ஜூன் மாதம் 2 தேதி முதல் ஜூன் 29 தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்று வந்த 20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் ரோஹித் சர்மா தலைமையில் அபாரமாக விளையாடிய இந்திய அணி இறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியினை வீழ்த்தி 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் உலகக்கோப்பையை தட்டி சென்றது.
நடந்து முடிந்த இந்த உலகக்கோப்பை தொடரில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது என ஐசிசி தற்போது ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரிசையாக அது என்னென்ன என்பதை பற்றி தற்போது பாப்போம்.
20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இறுதி போட்டியில் விளையாடிய 2 அணிகளும் லீக் சுற்றிலும், சூப்பர் 8 சுற்றிலும் தோல்வியடையாமல் இருந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இதுவே முதல் முறையாகும்.
இறுதி போட்டியில் ஒரு அணியின் அதிகபட்சமான ஸ்கோர் என்றால் அது இந்திய அணி, தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக செட் செய்த ஸ்கோராகும் (171 /6). இதற்கு முன் கடந்த 2021 ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி செட் செய்த 174 /2 ஸ்கோரே அதிகமாக இருந்தது, ஆனால் அது இங்கு முறியடிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பையி ஒரு அணிக்கு கேப்டனாக இருந்த மிக வயதான வீரர் (37 வயது) என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் அர்ஷதீப் சிங்கும், ஆப்கானிஸ்தான் அணியின் ஃபசல்ஹக் ஃபரூக்கியும் பெற்றுள்ளனர். இருவரும் 17 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர், இது கடந்த ஆண்டு இலங்கை அணியில் 16 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்த ஹசரங்காவை விட 1 விக்கெட் அதிகமாகும்.
20 ஓவர் உலகக்கோப்பை தொடரில், 8.3 என்ற பந்துவீச்சு சராசரியை பும்ரா பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். இது கடந்த ஆண்டு தென்னாபிரிக்கா அணியின் நார்கியா விட (8.5 சராசரி) குறைந்ததாகும். மேலும், 4.17 என்ற சிறப்பான எகானாமியிலும் தொடரை முடித்துள்ளார். இதனால் இவர் தொடரின் நாயகன் விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியின் கிறிஸ் ஜோர்டான் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தி இருக்கிறார். அதில் ஒரு ஹாட்ரிக்கும் அடங்கும். இதே சாதனையை கடந்த வருடம் நெதர்லாந்து அணியின் கர்டிஸ் கேம்பர் நிகழ்த்தினார், ஆனால் அது தொடர்ச்சியான4 பந்துகளாக இருந்தாலும் அடுத்தடுத்த ஓவர்களில் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்து அணியின் லாக்கி ஃபெர்குசன், பப்புவா நியூ கினி அணியுடனான ஒரு போட்டியில் 4 ஓவர்களை வீசி அந்த 4 ஓவர்களையும், 1 ரன்னை கூட கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி உலகக்கோப்பை தொடர் அல்லாமல் ஒட்டு மொத்த கிரிக்கெட் வரலாற்றியலையே புதிய சாதனையை நிகழ்த்தினார்.
ஒரு உலகக்கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக நிகோலஸ் பூரன் முதலிடத்தில் இடம் பெற்றுள்ளார். அவர் இதை தொடரில் மட்டும் 17 சிக்ஸர்கள் அடித்து இதற்கு முன் சக முன்னாள் வீரரான கிறிஸ் கெயில் சாதனையை முறையடித்துள்ளார்.