முதல் இந்தியராக டி-20 கிரிக்கெட்டில் புதிய சாதனை; தீப்தி சர்மா அசத்தல்.!
டி-20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையை தீப்தி சர்மா படைத்துள்ளார்.
டி-20 கிரிக்கெட் வரலாற்றில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் மற்றும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா படைத்துள்ளார். ஐசிசி மகளிர் டி-20 உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்கள் எடுத்ததன் மூலம் தீப்தி சர்மா, டி-20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்களை நிறைவு செய்து, இந்த புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
25 வயதான ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா, 89 டி-20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 100 விக்கெட்களை எடுத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக டி-20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பூனம் யாதவ் 98 விக்கெட்களும், யுஸ்வேந்திர சாஹல் 91 விக்கெட்களும், புவனேஷ்வர் குமார் 90 விக்கெட்களும் எடுத்து அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றனர்.
A big milestone for Indian spinner Deepti Sharma ????
She becomes the first India international to reach the landmark in T20Is.
Follow LIVE ????: https://t.co/SB27Oahkfj #WIvIND | #T20WorldCup | #TurnItUp pic.twitter.com/B1JyC9RDKp
— T20 World Cup (@T20WorldCup) February 15, 2023