டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு; ஜெயவர்தனே சாதனையை உடைத்த ரோஹித் சர்மா.!
இலங்கையின் ஜெயவர்தனே சாதனையை முறியடித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா புதிய வரலாறு படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இரன்டு இன்னிங்சிலும் ரோஹித் சர்மா அரைசதம் (80 & 57) அடித்துள்ளார். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா அதிரடியாக விளையாடி அதிவேக சதமடித்து பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர். முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 438 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 255 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்சில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக அரைசதம் அடித்தார், அவர் 44 பந்துகளில் 5 போர்கள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 57 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இந்த இன்னிங்சில் ரோஹித் 10 ரன்கள் எடுத்தபோது ஒரு புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அதாவது ரோஹித் சர்மா, தொடர்ச்சியான டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 30 முறை இரட்டை இலக்க ரன்கள்(10-99) எடுத்து புதிய வரலாறு படைத்துள்ளார். இதற்கு முன்பாக இலங்கை அணியின் மஹேலா ஜெயவர்தனே, 29 தொடர்ச்சியான டெஸ்ட் இன்னிங்ஸ்களில் இரட்டை இலக்க ரன்கள் எடுத்திருந்த சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.
ரோஹித் சர்மாவின் கடைசி 30 டெஸ்ட் இன்னிங்ஸ் ஸ்கோர்:
12,161,26,66,25,49,34,30,36,12,83,21,19,59,11,127,29,15,46,120,32,31,12,12,35,15,43,103,80,57. இதில் ரோஹித் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்காமல் 30* முறையாக இந்த சாதனைப் பயணத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார்.