கிரிக்கெட் பந்து அடித்து புதுமாப்பிள்ளை பலி…!

சென்னை துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல் ஓன்று நங்கூரம் போட்டு நிறுத்தி வைக்கப்பட்டது.அதில் இருந்த கடற்படை வீரர்கள் தங்களது ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க வருகின்றனர்.
இந்நிலையில் அந்த கப்பலில் பணியாற்றும் ராஜஸ்தானை சேர்ந்த ஜோகேந்தர் , விவேக் , கமல் , விஷ்வாகுமார் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது விவேக் வீசிய பந்து ஜோகேந்தர் நெஞ்சில்பட்டது.
இதில் பந்து அடித்த உடனே ஜோகேந்தர் சுருண்டு கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற வீரர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இவருக்கு கடந்த மே மாதம் தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.