இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் இன்று மாலை அறிவிப்பு ! கோலி கனவு பலிக்குமா !

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலம் உலகக்கோப்பை உடன் முடிவடைந்த நிலையில் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட மற்ற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. விண்ணப்ப கால அவகாசம் கடந்த 30-ம் தேதி முடிந்தது.
இன்று மும்பையில் புதிய பயிற்சியாளருக்கான தேர்வு நடைபெறுகிறது.புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில் தேவ் தலைமையில் அன்ஷுமன் கொய்க்வாட் , சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பதவிக்கு ஆயிரக்கணக்கான பேர் விண்ணப்பித்து இருத்தனார்.அதில் இருந்து இறுதியாக டாம் மூடி , மைக் ஹெஸன் ,கேரி கிர்ஸ்டன் ,ஜெயவர்த்தனே ,ராபின் சிங் மற்றும் லால்சந்த் ராஜ்புத் ஆகியோர் தேர்வு செய்தனர்.
இந்நிலையில் இவர்களுக்கான நேர்காணல் தேர்வு இன்று மும்பையில் உள்ள கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த நேர்காணல் தேர்வு இன்று காலை தொடங்கியது.புதிய பயிற்சியாளர் யார் என்பதை இன்று மாலை 7 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்க உள்ளனர்.
மேலும் கேப்டன் கோலி , ரவி சாஸ்திரியே இருக்க வேண்டும் என விரும்பும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024