சிஎஸ்கேவுக்கு புது கேப்டன்! ‘தோனி ‘முடிவுக்கு காரணமே இது தான்-கிறிஸ் கெயில்!

Chris Gayle சென்னை அணிக்கு புதிய கேப்டனாக தோனி எடுத்த முடிவின்படி ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இது குறித்து பல கிரிக்கெட் வீரர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய கிறிஸ் கெயில் ” என்னை பொறுத்தவரை தோனி எடுத்த இந்த முடிவு நல்லது என்று தான் சொல்வேன். ஏனென்றால், தோனி இந்த சீசனில் சில போட்டிகளில் மட்டுமே விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஏனென்றால், இந்த சீசனில் அவருக்கு சில போட்டிகளில் ஓய்வு எடுத்து கொள்ள விரும்பி இருக்கலாம்.
இது போன்ற சில காரணங்களுக்காக திடீரென இப்படியான முடிவை அறிவித்தால் சரியாக இருக்காது என்று ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக செயல்படுவார் என்ற முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், இந்த முடிவை பார்த்த ரசிகர்கள் யாரும் சோகம் அடையவோ அதிர்ச்சியடையவோ வேண்டாம். ஏனென்றால், தோனி எது செய்தாலும் நல்லதுக்கு தான். எனவே எல்லாத்தையும் மறந்துவிட்டு ஐபிஎல் போட்டியை ரசிபோம்” எனவும் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் முதல் போட்டியில் சென்னை அணியும் பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் தான் ருதுராஜ் கெய்க்வாட் முதன் முதலாக கேப்டனாக விளையாடினார். முதல் போட்டியிலேயே அவருடைய தலைமையில் சென்னை அணி வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியை தொடர்ந்து அடுத்ததாக மார்ச் 26-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025