சாம் கரணுக்கு பதில் புதிய ஆல்-ரவுண்டர்! – ஒப்பந்தம் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்!

சாம் கரண் விலகியதால் அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டரை ஒப்பந்தம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
இங்கிலாந்து வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த ஆல்-ரவுண்டருமான சாம் கரணுக்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐபிஎல்லில் மீதமுள்ள போட்டிகள் மற்றும் வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்தும் விலகினார். இந்த சீசனில் சென்னை அணிக்காக சாம் கரண் ஒன்பது போட்டிகளில் விளையாடி ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை அணி தற்போது குவாலிபயர் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், காயம் காரணமாக சாம் கரண் விலகலை தொடர்ந்து, அவருக்கு பதில் மாற்று வீரர் யாரை எடுப்பார்கள் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், சாம் கரண் விலகியதால் அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் டோமினிக் ட்ரேக்ஸை ஒப்பந்தம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சென்னையில் புதிதாக எடுத்துள்ள டோமினிக் ட்ரேக்ஸ் 23 வயது கொண்ட இளம் வீரர் ஆவார். பர்பாடியன் நாட்டை சேர்ந்த இவர் முன்னாள் மேற்கு இந்திய தீவு வீரர் வாஸ்பர்ஸ் டிரேக்ஸின் மகன் ஆவார். சமீபத்தில் நடந்து முடிந்த கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் பிராவோ வழி நடத்தும் செய்ண்ட் கிட்ஸ் அணிக்காக விளையாடிய 16 விக்கெட்களை கைப்பற்றி 4-வது இடத்தைப் பிடித்தார்.
மேலும், 24 பந்துகளில் 48* ரன்கள் சேர்த்து மேட்ச் வின்னராக இருந்தார். சிபிஎல்லில் செயின்ட் கிட்டிஸ் அணியில் இவர்தான் முக்கிய பவுலர். இதுவரை சர்வதேச போட்டிகளில் ஆடாத டோமினிக் டிரேக்ஸ் ஒரே ஒரு முதல் தர போட்டியிலும், 25 முதல் நிலை போட்டிகளிலும் ஆடியுள்ளார். இவர் ஐபிஎல் 14-வது சீசனுக்காக நெட் பௌலராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025