SLvIND : இதுவரை ஓயாத ட்ரோல்ஸ் !! கம்பீரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !!

Gautam Gambhir

SLvsIND : இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான நடைபெற்று வந்த தொடரானாது கடந்த ஜூலை-27ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட்-7ம் தேதியோடு முடிவடைந்தது. இந்த தொடரில் இந்திய அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது.

ஆனால், அதன் பிறகு நடைபெற்ற 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் போட்டி ட்ராவானது அதன் பிறகு இலங்கை அணி மீதம் இருந்த 2 போட்டியிலும் வெற்றியை பெற்று அந்த தொடரை கைப்பற்றியது. இதனால் 1997-க்கு பிறகு அதாவது சுமார் 27 வருடங்களுக்கு இலங்கை அணி இந்திய அணியை ஒரு தொடரில் வென்று அந்த தொடரை கைப்பற்றி இருக்கிறது.

இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணியையும், இந்திய அணியின் புதிய பயிற்சியாளாரான கவுதம் கம்பீரையும் நெட்டிசன்கள் இணையத்தில் கலாய்த்து வந்தனர். இது அன்றோடு முடிந்து விடாமல் தற்போது வரை அவரையும் அணியையும் கலாய்த்து வருகின்றனர்.

அதில் பெரிதும் கலாய்க்கப்பட்டது கவுதம் கம்பீர் தான். அவரது புகைப்படத்தை உபயோகித்து பல மீம்ஸ்களை வைத்து கலாய்க்க தொடங்கினார். அதிலும் ஒரு சிறிய குழந்தை மொட்டை அடித்தது போல் உள்ள ஒரு படத்தை வைத்து அதில் அந்த குழந்தையின் முகத்திற்கு பதிலாக கம்பீரின் முகத்தை வைத்து கலாய்த்து வருகின்றனர்.

மேலும், புதிய பயிற்சியாளராக பணியிலாற்றி வரும் கவுதம் கம்பீர் தேர்வானதிலிருந்து பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இதெல்லாம் மாறவேண்டும் என்றால் அடுத்ததாக விளையாட போகும் வங்கதேச அணியுடனான தொடர், மற்றும் அதன்பிறகு நடைபெறும் தொடர்களை கைப்பற்ற வேண்டும். ஒரு முனையில் அவரை கலாய்த்து பேசி கொண்டிருந்தால், மறுமுனையில் அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்