ஐபிஎல் 2024 : இஷான் கிஷன் செஞ்ச காரியத்தை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகள் விளையாடி அந்த 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. மும்பை அணியின் பார்ம் மிகவும் மோசமாக இருக்கும் நிலையில், அடுத்த போட்டியில் வெற்றிபெற்று கம்பேக் கொடுக்கும் முனைப்போடு பயிற்சி எடுத்து வருகிறது.
கடைசியாக நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணி வருகின்ற ஏப்ரல் 7-ஆம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் விளையாட தயாராகி வருகிறது. இதற்கிடையில் இஷான் கிஷன் செய்த விஷயம் நெட்டிசன்கள் கலாய்க்கும் விதமாக அமைந்துள்ளது.
அது என்னவென்றால், மும்பை விமான நிலையத்தில் இஷான் கிஷன் சூப்பர் மேன் போன்ற உடை அணிந்துகொண்டு வந்தது வேடிக்கையாக இருந்தது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் மூன்று போட்டியில் தோல்வி அடைந்தது பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லை போல என கலாய்த்து வருகிறார்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…