Cricket Breaking: தென்னாப்பிரிக்காவை வேட்டையாடிய நெதர்லாந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூப்பர் 12 இல் ஏ பிரிவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு சென்றுவிட்டன.
இந்நிலையில் பி பிரிவில் யார் அரை இறுதிக்கு எந்த அணிகள் செல்லும் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தென்னாப்பிரிக்காவின் அரையிறுதி கனவை தவிடுபொடியாக்கிய நெதர்லாந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இன்று பி பிரிவில் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது இதில் முதல் போட்டியானது தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்துக்கு இடையே அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
நெதர்லாந்து அணி:
போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.
நெதர்லாந்து வீரர்களில் அக்கர்மேன்(41), மைபர்க்(35), டாம் கூப்பர்(35), மேக்ஸ் ஓடோவ்ட்(29) எடுத்தனர்.தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்களில் மகாராஜ் 2 விக்கெட் மற்றும் நார்ட்ஜே, மார்க்ராம் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
தென்னாபிரிக்கா அணி:
இதனைத் தொடர்ந்து 159 என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் குறுகிய ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெறும் என்று இருந்த நிலை மாறி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை மட்டும் எடுத்து நெதர்லாந்து அணியிடம் அரையிறுதி கனவை இழந்தது.
தென்னாபிரிக்கா அணியில் ரிலீ ரோசோவ் (25),பிராண்டன் குளோவர்(20), ஹென்ரிச் கிளாசென்(21) எடுக்க மற்ற வந்த அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நெதர்லாந்து பந்து வீச்சாளர்களில் பிராண்டன் குளோவர் 3 விக்கெட் மற்றும் பிராண்டன் குளோவர், பாஸ் டி லீட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.இறுதியில் நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
26 பந்துகளில் 41 ரன்களை எடுத்த நெதர்லாந்து வீரர் அக்கர்மேன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.